பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாவேந்தர் படைப்பில் அங்கதம் அது இன்னும் அச் சேறாமல் கையெழுத்துப் படியாகவே உள்ளது. - சமதருமக் கருத்துக்களை மையமாக வைத்துக் கவிஞர் நிறைய பாடல்கள் எழுதியுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை கண்ணிர்ப் பொங்கல், செம்படவன், மேதினம், நீங்கள் சிலபேர்- என்பவை குறிப்பிடத்தக்கவை. கம்பதாசனுக்கு ஷெல்லியின் மீதும் பைரனின் மீதும் பற்றுண்டு. அவன்” பாடல் பதிவுக்கு மும்பை. சென்றபோது, புத்தகக் கடையைத் தேடிச்சென்று கலீல் கிப்ரான் நூல்களை வாங்கியதாக உடன் சென்ற ஆந்திர மகாகவி ஆருத்ரா குறிப்பிட்டுள்ளார். 'கவிதா என்ற பெயரில் கவிதை இதழ் ஒன்றும் நடத்தியிருக்கிறார் கம்பதாசன். அதன் அலுவலகம் ‘புரசைவாக்கம் குளம் அருகில் இருந்தது. தமிழ்நாடு சங்கீத நாடகச் சங்கம் கலைச்சிகாமணி (இன்றைய கலைமாமணி) என்ற பட்டம் வழங்கி இவரைச் சிறப்பித்தது. A cup of wine, a book of verse GTGöT MN GlFTL_GISLh உமர்கயாமின் பாடலில் மதுவும் மங்கையும் குறியீடுகள். ஆனால் பல கவிஞர்கள் அவ்விரண்டையும் கவிஞனுக்குரிய அங்கீகாரமாகவே நினைத்துவிட்டார்கள். அவ்வாறு நினைத்துக் கெட்டழிந்த தமிழ்க் கவிஞர்களுள் கம்பதாசனும் கண்ணதாசனும் தலையாயவர்கள். திவ்யமது! திராட்சைமது ஊற்றடி பெண்ணே! செக்கரென ரத்தஒளி சேர்த்திடக் கண்ணே! என்று கம்பதாசனும் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு