பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- முருகு சுந்தரம் 一图 என்று கண்ணதாசனும்பாடி மதுவையும் மங்கையையும் ஆராதித்தனர். நகைச்சுவை நடிகர் வி.கே. ராமசாமி கம்பதாசனிடம் நெருங்கிப் பழகியவர். கவிஞரைப் பற்றி நினைவு கூர்ந்த அவர், 'கம்பதாசன் எப்போதும் ஜின் னே விரும்பி அருந்துவார். அவரைப் போன்ற மது பக்தரை என் வாழ்நாளில் இதுவரை சந்திக்கவே இல்லை. அவரிடம் கவிதை எழுதக் கற்றுக் கொள்ள முயன்றேன். ஆனால் குடிப் பழக்கத்தைத்தான் என்னால் கற்றுக் கொள்ள முடிந்தது” என்று குறிப்பிட்டுள்ளார். குடியினாலும், கட்டுப்பாடற்ற வாழ்க்கையினாலும் குறுகிய காலத்தில் கம்பதாசன் வாழ்க்கைக் கனவுகள் கலையத் தொடங்கின. குடும்ப வாழ்க்கை சிதறியது. ஒரு முறை குடித்துவிட்டு வீதியில் தகராறு செய்தார் என்பதற்காகக் கைது செய்து சைதாப்பேட்டைக் காவல் நிலையத்தில் அடைத்துவிட்டனர். இதை அறிந்த பாரதிதாசன் சைதாப் பேட்டை சென்று பிணை கொடுத்து அவரை மீட்டு வந்தார். - இளமைக் காலத்தில் கலைச் செருக்கோடும், மிடுக்கோடும் தலைநிமிர்ந்து வாழ்ந்த கம்பதாசன் முதுமையில் உதவிகோரித் தண்டுன்றித் தம் நண்பர்களைத் தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. என்புருக்கி நோய் அவரை அரித்துத் தின்றது. குடி அவர் குடலையும் கல்லீரலையும் செயலற்றதாக்கி விட்டது. இராயப்பேட்டை மருத்துவமனையில், அவரைக் கேட்பாரற்றுத் தரையில் கிடத்தியிருந்தனர். சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் பரிந்துரையின் பேரில் அவருக்கு சி பிரிவில் இடமும் மருத்துவ வசதியும் வழங்கப்பட்டன. 23, 5, 1973 பிற்பகல் ஒரு மணியளவில் அவர் ஆவி பிரிந்தது. “கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, நலிந்த கலைஞர் ஐவருக்கு மாதம் ரூ 100. வழங்க ஏற்பாடு செய்தார். 'உதவித்தொகை பெற்ற் ஐவருள்