பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம்-இ) 1951ஆம் ஆண்டு திருச்சியில் பாரதிதாசனுக்கு மணிவிழா நடத்த ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்காக கி.ஆ.பெ. விசுவநாதம் தலைமையில் ஒரு விழாக்குழு அமைக்கப்பட்டு நிதி திரட்டப்பட்டது. அக்குழுவில் திருலோகமும் ஒருவர். நடுவில் ஏற்பட்ட சில குழப்பங்களின் காரணமாக விழாக்குழு உடைந்தது. கி. ஆ. பெ. வும் குழுத்தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். திருலோகமும் செயற்குழு உறுப்பினர் பொறுப்பை இராஜினாமா செய்துவிட்டார். பாரதிதாசனிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி அவரைச் சமாதானப்படுத்தத் திருச்சியிலிருந்து ஒரு குழு புதுவைக்குப் புறப்பட்டது. அக்குழுவில் திருலோகம், அன்பில் தருமலிங்கம், பராங்குசம் ஆகியோரும் வேறு சிலரும் இடம் பெற்றிருந்தனர். அங்கு நடந்ததைத் திருலோகம் தமது சிவாஜி இதழில் கீழ்க்கண்டவாறு ஒரு கட்டுரையில் விவரித்திருக்கிறார். “வீட்டு முற்றத்தில் சாய்வு நாற்காலியில், சிங்கம் படுத்துக் கிடப்பது போல் பாரதிதாசன் சாய்ந்திருந்தார். நண்பர்கள் என்னை முதலில் உள்ளே போகச் சொன்னார்கள். வாயிற்படியில் நுழைந்து இடைகழியில் சென்று அவர் நேரில் நின்றுவிட்டேன். கிட்டே போகத் துணிவில்லை. கவிஞர் நிமிர்ந்து உட்கார்ந்தார். ‘ரிஷைன் பண்ணிட்டியல்ல?’ என்று கேட்டார். "ஆமாம் ரிஷைன் பண்ணிட்டன்' என்றேன். ‘அப்ப, வெச்சிடு போ' - என்றார் கவிஞர். கையில் வைத்திருந்த விழாக்குழு சம்பந்தப்பட்ட தாள்களையெல்லாம் அப்படியே வைத்துவிட்டு வாசற்பக்கம் செல்லத் தொடங்கினேன்.