பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ 'நில்!” என்ற சொல் கேட்டு மீண்டும் திரும்பினேன். "ஆமாம்! உனக்கு என்னை முதலில் தெரியுமா? கி. ஆ. பெ. விசுவநாதத்தையா? “உங்களைத்தான் முதலில் தெரியும்! ‘பின்ன ஏன் விசுவநாதன் விலகினதும் நீயும் விலகின? ஒரு வேளை அவர் உனக்கு நெல் அனுப்பமாட்டார்னு பயமா? பேசாமல் மெளனமாகச் சிறிது நேரம் நின்றேன். பிறகு மெதுவாக "நான் பேசலாமா?’ என்று கேட்டேன். 'பேசு!" என்றார் பாரதிதாசன். “யாரை முதலில் தெரியும் என்றல்லவா கேட்டீர்கள்? உங்களையும் எனக்கு முதலில் தெரியாது; உங்கள் கவிதைகளைத்தான் எனக்கு முதலில் தெரியும். அதைத் தெரிந்து கொண்ட காரணத்தால் தான் உங்களைத் தெரிந்து கொண்டேன். ஆகையால் யாரும் நெல் அனுப்பி எனக்குப் படியளக்க வேண்டியதில்லை. உங்கள் கவிதைகள் என்னிடம் உள்ளன. அவற்றை நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. உங்களைக் காட்டிலும் உங்கள் கவிதைகளே எனக்கு அதிகம் மதிப்புடையவை” என்று வேகமாகப் பேசினேன். சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த பாரதிதாசன் துள்ளி எழுந்தார். வழக்கம்போல் முழங்கால் வரையிலும் வேட்டியைச் சுருக்கிப் பிடித்துக் கொண்டார். சுற்றியிருந்தவர்களைப் பார்த்துச் சொன்னார். 'அவண்டா தமிழன்! நீ வேண்டியதில்லை! உன் கவிதை எனக்குப் போதும்னு சொல்றானே! அவன் மறத்தமிழன். அவன் அஞ்சா நெஞ்சுடையவன்' என்றார்; என்னை அருகில் இழுத்து அமர்த்திக் கொண்டார்.