பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -2) அவனெழுதும் சிவாஜியெனும் வாரத்தாள் வாழியப்ல் லாண்டு நன்றே பல்லேடும் கூடியொரு பழந்தமிழன் சீர்த்தியினை மறைக்கு மாயின் வில்லோடும் அம்போடும் வரும்பகையைத் தனிநின்று வீழ்த்து வான் போல் சொல்லோடும் பொருள்சிறக்கத் தூய் தமிழின் சீர்சிறக்க எழுது கின்ற நல்லேடாம் சிவாஜிக்கு நல்லாசான் திருலோகன் நாளும் வாழ்க! கவிதையைப் படித்து முடித்த நான் "மலருக்குக் கவிதை கேட்டால், என்னைப் பற்றி எழுதியிருக்கிறீர்களே! என்றேன். “முட்டாளு! உனக்கு என்ன பஞ்சம் தெரியுமா? பணப் பஞ்சமில்லே, புகழ்ப் பஞ்சம்! உன் பெருமை உனக்குத் தெரியாது. நான்தான் அதை நாலுபேர் அறியச் சொல்லணும். சும்மா போடு என் கையெழுத்தில்ல போட்டிருக்கேன்!” என்றார். அவர் குழந்தை மனத்தையும், அன்பின் பெருமையையும் கண்டு மெய் சிலிர்த்தேன், இப்பாடல் சிவாஜியின் பதினேழாவது ஆண்டு மலரில் வெளியிடப்பட்டது.” கடைசியாக நான் திருலோக சீதாராமைச் சந்தித்தது 1972 ஆம் ஆண்டு. அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் ஆண்டுதோறும் அக்டோபர் திங்களில் சென்னை இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் காந்தி - வள்ளலார் விழா சிறப்பாக நடத்துவது வழக்கம்.