பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகு சந்தரம் -இ செய்திகள் திரட்ட விசாரித்தேன். அவர் குடும்பம் திருச்சியை விட்டுச் சென்றுவிட்டது என்றும், அக்குடும்பத்தினர் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாது என்றும் கூறிவிட்டனர். கவிதையைப் பற்றிய அவரது கருத்துக்கள் சில “பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா! என்கிறார் பாரதி. இது தான் கவிதை என்று வார்த்தைகளால் வகுத்துரைக்க ஒண்ணாத பேரனுபவம் கவிதை. இனிமை, உணர்ச்சி, இசை, தெளிவு இத்தனையும் கலந்த ஒரு கலவை கவிதை என்பது என் கருத்து. மலையும் மடுவும், வானும் கடலும், மானும் புலியும் என்று இப்படித் தோன்றும் படைப்பு இன்பம் துன்பம், வெற்றி தோல்வி, பிறப்பு இறப்பு இப்படியாக இயல்கின்ற வாழ்க்கை - ஒன்றையொன்று பின்னிக் கிடக்கின்ற முரண்தொடை போன்று தோன்றுகின்றன. சாதாரண மனிதர் கண்களுக்குப் பொருள் விளங்காத புதிர் இது. கவி உள்ளத்தில் இந்த வேறுபாடுகளைக் கடந்து நிற்கின்ற ஒருமை, முரண்பாடுகளை வென்ற அழகு புலனாகிறது. அந்த அமைதியை, அழகை, அர்த்தத்தை, அதை உணர்ந்து கொண்டதனால் விளைந்த இன்பத்தை வாய்விட்டுக் கூறவேண்டுமென்ற எழுச்சியில் கவிஞன் பாடுகிறான். - இலக்கியப் படைப்புக்குக் காலப்போக்கும் சூழ்நிலையும் கூடக் காரணமாகின்றன. சமுதாயம், சமயம், அரசியல், பொருளாதாரம், காதல் போன்ற எல்லாத் துறைகளிலும் மாறுதல் ஏற்பட்டு விட்டது. கால மாறுதல்களை ஒட்டிப் புதுப்புது மனோபாவங்களை இலக்கியம் பிரதிபலிக்கும் போது அது கவிதையிலும் தெளிவாகத் தெரியத் தானே செய்யும்