பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாவேந்தர் படைப்பில் அங்கதம் இயற்கைக்கும் உள்ள நெருக்கம் புலனாகிறது. கவிஞன் உள்ளம் இயற்கையோடு எளிதில் ஒட்டிக் கொள்கிறது; அதில் கரைந்தும் விடுகிறது. சாதாரண மக்களின் கண்களுக்குப் புலப்படாத விந்தைகள் கவிஞன் கண்ணெதிரே அணிவகுத்து நிற்கின்றன். கவிஞன் கையில் எழுதுகோலைத் துக்கியதும், இயற்கைக் கருவூலம் அவன் எதிரில் தானாகத் திறந்து கொள்கிறது. இயற்கைக் காட்சிகள், அவனுடைய கற்பனையில் குளிக்கத், திறந்தமேனியோடு போட்டி போட்டு நிற்கின்றன. கனவு மயக்கத்தில் கவிஞன் இருந்தாலும், அவனைத் தட்டி எழுப்புகின்றன. இதைத்தான் பாரதிதாசன் கீழ்க் கண்டவாறு பாடுகிறார் : ஏடெடுத்தேன் கவிஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான்! ஒடையும் தாமரைப் பூக்களும் தங்களின் ஒவியந் தீட்டுக என்றுரைக்கும்! காடும் கழனியும் கார்முகிலும் வந்து கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும் சோலைக் குளிர்தரு தென்றல் வரும்; பசுந் தோகை மயில்வரும் அன்னம் வரும்; மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும் மாணிக்கப் பரிதி காட்சி தரும். காலைச் செங்கதிர் கண் விழித்ததும் உழவன் கலப்பையை எடுத்துக் கொண்டு வயற்காட்டுக்குப் புறப்படுகிறான். பால்காரி கூடையைச் சும்மாட்டில் ஏற்றி, இடையசைத்து நகரத்தை நோக்கி நடக்கிறாள். தளர்ந்த பெரியவர் தாடையில் போட்டுக் கொண்டு கதிரவனைத் தொழக் கை கூப்புகிறார். ஆனால் கவிஞன் மட்டுமே. எழுந்தது செங்கதிர் தான் கடல்மிசை! அடடா எங்கும் விழுந்தது தங்கத் துரற்றல் -