பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ தமது தொண்டில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளத் துறவு வாழ்க்கையே சிறந்தது என்று இருவரும் முடிவு செய்தனர். இளமைப் பருவத்தே வள்ளலார் முருக வழிபாடும், சிவ வழிபாடும் மேற்கொண்டு ஒழுகினார்; நாராயண குரு லிங்க வழிபாட்டில் ஈடுபட்டார். இறுதிக் காலத்தில் வள்ளலார் ஜோதி வழிபாட்டை அறிமுகப்படுத்தினார். நாராயண குருவும் கண்ணாடி விளக்கு வழிபாட்டைக் கோயில்களில் அறிமுகப்படுத்தினார். “ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தையும் கோயில்களில் வழிபாட்டுப் பொருளாக்கினார். இருவருமே சனாதனக் கொள்கையை எதிர்த்தனர். சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே என்று மக்களுக்கு அறிவுறுத்திய வள்ளலார், நீதியிலும் சன்மார்க்க நெறியிலும் அவர்களைச் செலுத்த உறுதிபூண்டார். நாராயண குருவின் கொள்கையும் அதுதான். இருவருமே இக்கொள்கைச தி.வேற்ற சத் சங்கங்களைத் தோற்றுவித்தன. . ஆனால் அக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தி நாடெங்கும் பரப்பும் முயற்சியில் இருவரும் வேறுபட்டனர். துறவு பூண்ட நாராயண குரு கன்னியாகுமரி மாவட்டத்தில், உள்ள மருந்துமலையில் ஆறாண்டுகள் தனிமையில் தவம் மேற்கொண்டு, கேரளத்தில் உள்ள சிவகிரியில் தமது பணியைத் தொடங்கினார். அம்மலையில்