பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகு சந்தரம் -இ இன்று நாராயண குருவின் இயக்கத்தால் உருவாக்கப்பட்ட மாணவர்கள் கேரளத்தில் சிறந்த அறிவியல் மேதைகளாகவும், இலக்கிய மேதைகளாகவும், கணித மேதைகளாகவும், கலைஞர்களாகவும் விளங்கக் &ᏏfTöyüFᎧafᎢ { {❍. மூன்றாவது குருவான நித்யசைதன்யர் ஓர் அறிவுக் களஞ்சியம். இந்த நூற்றாண்டில் முகிழ்த்த புதிய துறைகளான உளவியல் சார்ந்த மொழியியல் (Psycho Cinguistic), Felso, Guorosuousi (Socio Linguistic) sougou பற்றிக்கூட அவர் நூல்கள் எழுதியுள்ளார். அவர் பல்துறை அறிஞர். வள்ளலார் தமது கொள்கையைப் பரப்ப நாடெங்கிலும் சன்மார்க்க சங்கங்களைத் தோற்றுவித்தார். ஆனால் அவற்றை நடைமுறைப் படுத்தும் திட்டங்களை உருவாக்கும் முன்பு மறைந்துவிட்டார் என்பதுதான் உண்மை. ஆன்மீகத் துறையில் நாராயண குருவையும் கடந்து உயர்ந்த சிகரங்களைத் தொட்டவர் வள்ளல் பெருமான். அருட்பெருந் சோதி தனிப் பெருங் கருணை! என்ற அவருடைய மந்திரம் ஆன்மிகத்தின் உயிர் நாடி நடராஜகுரு போலச் செயல்திறன் மிக்க சீடர்கள் வள்ளலாருக்கு வாய்க்கவில்லை என்பது உண்மை. இந்நூற்றாண்டின் முற்பகுதியில் ஊர்தோறும் சன்மார்க்க சங்கங்கள் நன்கு இயங்கிக் கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. இன்று அவற்றின் செயல்பாடுகள் அருகிக் கொண்டிருக்கின்றன. மக்கள் கவனத்தை அரசியலும் கேளிக்கைகளும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. அருட்செல்வர் மகாலிங்கம் தொடங்கியுள்ள இராமலிங்கர் பணிமன்றம் வள்ளலாரின் கொள்கையை