பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- பாவேந்தர் படைப்பில் அங்கதம்-இ நிராகரிக்கப்பட்டன; வேறு கட்சிகளின் சார்பில் மனுச் செய்த வேட்பாளர்கள் சிறை செய்யப்பட்டனர்; தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபையோ நேருவுக்கும் ஷேக் அப்துல்லாவுக்கும் நடுவில் சிக்கிக் கொண்டு திண்டாடியது. இறுதியில் ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். ஷேக் அப்துல்லாவின் கைது, முஸ்லிம்களுக்கும் காஷ்மீர்ப் பண்டிதர்களுக்கும் இடையில் வெறுப்பும், பகையும், கலவரமும் ஏற்படுவதற்கு வித்தாக அமைந்தது. 1957, 1962 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரசைத் தவிர மற்ற கட்சிகள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. இச் செயல் காஷ்மீர் நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. அமைதி குலைந்த காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட நேரு சில புதிய முயற்சிகளை மேற்கொண்டார். 370ஆவது சட்டப் பிரிவைக் காஷ்மீரில் கொண்டு வந்து வேறு மாநிலங்களுக்கு இல்லாத சிறப்பு நிலையை அதற்கு வழங்கினார். ஆனால் இச்சட்டம் நிறைவேற்றப்படும்போது, அதை ஆதரித்து வாக்களிக்க காஷ்மீர்ச் சட்டப் பேரவையில் ஓர் உறுப்பினர் கூட வரவில்லை. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பொதுச்சட்டங்கள், மாநிலச் சட்டப் பேரவையிலும் கொண்டு வரப்பட்டு உறுதி (Ratification) செய்யப்பட வேண்டும். சட்டப் பேரவை சரியாக இயங்காத காரணத்தால், காஷ்மீரில் பல சட்டங்கள் அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. 1988இல் மதத் தீவிரவாதத்தை அடக்க நாடாளுமன்றத்தில் ஒரு தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் காஷ்மீருக்கு மிகவும் தேவையான சட்டம். ஆனால் அச்சட்டத்தைக் காஷ்மீர் சட்டப் பேரவையில் நிறைவேற்ற முடியவில்லை. அதனால்