பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- முருகு கந்தரம்-இ அச்சட்டம் ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்தாத நிலை ஏற்பட்டது. காஷ்மீர் மாநிலத்தில் 370ஆவது சிறப்புப் பிரிவைக் கொண்டுவந்ததால், பல மோசம்ான பின் விளைவுகள் ஏற்பட்டன. காஷ்மீர் முஸ்லீம்களைத் திருப்திப் படுத்துவதற்காகவும், அங்கு அமைதியை நிலைநாட்டி ஆட்சியை நடத்துவதற்காகவும் அரசாங்கப் பணத்தை வாரி இறைத்தார் நேரு என்றாலும் காஷ்மீரில் தீவிரவாதம் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருந்ததே தவிரக் குறையவில்லை. - - - - - - காஷ்மீரில் கால் கொண்டிருந்த இந்தத் தீவிரவாதம் பிற மாநிலங்களிலும் காட்டுத் தீப்போல் பரவியது காலப்போக்கில், குறிப்பாக வடகிழக்குப் பிராந்தியங்களான, அசாம், திரிபுரா, மணிப்பூர் மாநிலங்களைச் சொல்லலாம். த்ங்கள் பகுதியில் பரவியிருக்கும் தீவிரவாதத்தைக் காரணம் காட்டித் தங்கள் மாநிலங்களுக்கும் 370ஆவது சட்டப்பிரிவின்படி சிறப்புநிலை வழங்க வேண்டுமென்று அவர்கள் வாதிடுகின்றனர். இந்திரா காந்தியின் காலத்தில் காஷ்மீர்ப் பிரச்சனை மேலும் சிக்கலடைந்தது. 1971ஆம் ஆண்டில் பாகிஸ்தானோடு நடைபெற்ற போரில் இந்தியர் பெரும் வெற்றியைப் பெற்றது. அவ்வெற்றியின்பேர்து பாகிஸ்தான் கைப்பற்றியிருந்த காஷ்மீர்ப் பகுதிய்ை விட்டு வெளியேறும்படி இந்தியா கட்டாயப்படுத்தியிருக்கலாம். அதை இந்திரா காந்தி செய்ய்த் தவறிவிட்டார். சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது, அதில் இடம் பெற்ற வேறு ஏதேனும் சமாதான வழியில் (any other peaceful means) என்ற வாசகத்தையாவது நீக்கும்படி