பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/187

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாவேந்தர் படைப்பில் அங்கதம் अहह] சூதாட்டக் கலாச்சாரம் குது என்ற சொல்லுக்கு வஞ்சனை என்று பொருள். வஞ்சனையாகச் செய்யப்படும் எல்லாச் செயல்களுமே சூதாட்டந்தான். மகாபாரதக் காலந் தொட்டே சூதாட்டத்தின் தீமை மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சூதாட்டம் பற்றி இந்தி எழுத்தாளர் பிரேம்சந்த் ஒரு கதை எழுதியிருக்கிறார். எதிரி நாட்டான் தன் நாட்டின் மீது படையெடுத்திருப்பதை அறியாமலே தொடர்ந்து மூன்று நாட்கள் ஒர் அரசன் சூதாடினான் என்பது அக்கதையின் கருப்பொருள். இக்கதையைப் பிரபல இயக்குநரான சத்யஜித் ரே திரைப் படமாகவும் ஆக்கியிருக்கிறார். சூதாட்டம் தீயது என்பதை வள்ளுவர் முதலாக எல்லா அறிஞர்களும் எடுத்துக் கூறியிருக்கின்றனர். தனது இரையாக நினைத்துத் தூண்டிற் புழுவை விழுங்கும் மீனைப்போல், சுவைக்காகச் சூதாட்டத்தில் இறங்கும் மனிதன் இறுதிவரை மீள முடியாமல் அதற்கே பலியாகிறான் குறள், 93 - சூதாட்டத்தின் தீமை உணரப்பட்டும், பண்டைக் காலந்தொட்டு இன்றுவரை இப்பழக்கம், அரசர் செல்வர் ஆகியோரின் கேளிக்கையாகவும்.பொழுதுபோக்காகவும் இருந்து வருகிறது. ஒவ்வோர் ஊரிலும் பொழுது போக்கு மன்றங்கள் (Recreation club) என்ற பெயரில் செல்வச் சீமான்களின் சீட்டாட்டம்தான் நடைபெறுகிறது. காவல்துறை இந்தச் சீமான்களை நெருங்குவதில்லை. சூதாட்டத்தைக் குற்றமாகக் கருதித் தண்டிக்க இந்நாட்டில்