பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/188

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகு சுந்தரம் 一墮 சட்டமுண்டு. அதே சமயம் அதை வேறு வழிகளில் வளர்க்க அரசாங்க ஆதரவும் உண்டு. நம் நாட்டின் சீரழிவிற்கு இதுவே காரணம். சூதாட்டம் பண்டை நாளில் தனிமனிதனின் பாதிப்பாக மட்டும். இருந்தது. இன்று இது சமுதாயப் பாதிப்பாக மாறியிருக்கிறது. அரசியல், பொருளியல், விளையாட்டு, கலை, பரிசுச்சீட்டு, லாட்டரிச்சீட்டு என்று அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி, இந்திய நாட்டைச் சூதாட்டம் ஆக்கிரமித்திருக்கிறது. வாக்களிக்கும் மக்களையும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களையும், சூதாட்டக் காய்களாக நகர்த்தும் கேவலமான செயலும், சட்டமன்ற உறுப்பினர்களைக் கடத்திச் சென்று தனித்தனியே விலைபேசும் ஈனச் செயலும் இன்றைய அரசியல் நடைமுறைகளாகிவிட்டன. ஹர்ஷத் மேத்தா என்ற தனிமனிதன் பல்லாயிரம் கோடி பணத்தை ஊழல் செய்து, நம் நாட்டுப் பொருளாதாரத்தையே திணறடிக்கும் பொருளியற் சூதாட்டம் இந்நாட்டில் தானே நடைபெறுகிறது! கிரிக்கெட் என்பது ராஜ விளையாட்டு. கிரிக்கெட் வீரர்கள் மனிதர்கள் அல்லர். இந்நாட்டு இளைஞர்களுக்கு அவதார புருஷர்கள்; இளம் பெண்களுக்கு மதுரமான மயக்கங்கள்! இன்று சூதாட்டத்தின் மூலம் நூறுகோடி மக்களையும் இவர்கள் முட்டாள்கள் ஆக்கிவிட்டார்கள். “ஒன்றைப் பெற்று நூறை இழக்கும் சூதாடிகளுக்கு வாழ்க்கை கிடையாது’ (குறள். 932) என்பது வள்ளுவர் வாக்கு சூதாட்டத்தில் ஒருநாள் வென்றவன் நூறு நாள் தோற்கிறான்.இன்று நாட்டைக் காட்டுத் தீயாக வளைத்துக் கொண்டிருக்கும் லாட்டரிச் சீட்டுக் கொடுமையும் அப்படியே ஒரு முறை நூறு ரூபாய் பரிசு விழுந்தால், மாதந்தோறும் நூறு ரூபாய்க்குப் பரிசுச்சீட்டு வாங்கும்