பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம்-இ) பழக்கம் வந்து அதற்கு அவன் அடிமையாகவே மாறி விடுகிறான். இவர்கள் வீட்டில் கடைசியாக ஈயப் பாத்திரங்கள்கூட மிஞ்சுவதில்லை. இச்சூதாட்டத்தில் பாதிக்கப்படுபவன் பணக்காரன் அல்லன், ஏழைகளும் கூலிக்காரர்களுமே. ஆனால் இக்கொடுமை அரசாங்கங்களின் அங்கீகாரத்தோடும் அரவணைப் போடும் நடைபெறுகிறது என்பதை எண்ணும்போது இரத்தக்கண்ணிர் வடிகிறது. குதிரைப்பந்தயத்தால் குப்புறக் கவிழ்ந்த குடும்பங்கள் கணக்கில் அடங்காதவை. ஆனால் இன்றையத் தலைவர்கள் அரசியல் காரணங்களைக் காட்டி எல்லாக் கொடுமைகளையும் நியாயப் படுத்துவதில் வல்லவர்கள். இன்று தொலைக்காட்சிகளில் இலட்சாதிபதி ஆக விருப்பமா? கோடீசுவரன் ஆக விருப்புமா?’ என்ற பெயரில் புதிய சூதாட்டம் பொது அறிவுச் சோதனை என்ற முக்காட்டில் பரபரப்போடு நுழைந்திருக்கிறது. ஃபின்லாந்து போன்ற பணக்கார நாடுகளில் ‘ஹூ வாண்ட் டுபி எ மில்லியனர்' என்ற பெயரில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நம்நாட்டுச் சராசரி வருமானத்தைப்போல் பல மடங்கு உயர்ந்தது ஃபின்லாந்தின் சராசரி வருமானம். அந்தப் பணக்கார நாட்டுக்கு இக்கேளிக்கை பொருத்தமாக இருக்கலாம். இந்த ஏழைநாட்டுக்கு இது தேவைதானா? இப்பரிசுத் திட்டங்கள் மூலம் சில பேருக்கு இலட்சமும் கோடியும் கிடைத்து விட்டால் இந்தியப் பொருளாதாரம் சீர்திருந்தி விடுமா? ஏழ்மை ஒழிக்கப்படுமா? சில கோடீசுவரர்கள் மேலும் பெரிய கோடீசுவரர்களாக ஆவதற்குத் தானே இத்திட்டம்? இத்தகைய சூதாட்டக் கலாச்சாரம் இந்திய நாட்டு இளைஞர்களின் குருதியோட்டமாகி விட்டது. உழைக்காமல் பணக்காரன் ஆகவேண்டுமென்ற எண்ணம் அவர்கள்