பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகு சந்தரம் -இ உள்ளத்தில் விதைக்கப்படுகிறது. சோம்பேறிகளாகவும், உழைப்பின் உயர்வை அறியாதவர்களாகவும், சுயமுயற்சியில் நம்பிக்கை அற்றவர்களாகவும், பகற்கனவு காண்ட்வர்களாகவும் சமூகத்தின் ஒரு பகுதியினர் உருவாக்கப்படுகின்றனர். ஒரு நல்ல அரசு தான் ஒரு நல்ல குடிமகனை * (5arrás (pig upsh (A perfect government makes a perfect citizen) என்பது கிரேக்கப் பழமொழி ஜப்பானியர்களைப் போல் உழைப்பில் நம்பிக்கையுள்ள, வாழ்க்கையோடு போராடுவதற்குச் சளைக்காத ஒர் இளைஞர் சமுதாயத்தை உருவாக்க நமது அரசாங்கங்கள் பாடுபட வேண்டும். இல்லையேல் நம் நாட்டுக்கு மீட்சி இல்லை. நாட்டு விடுதலைக்காகச் சொத்து, சுகம் யாவற்றையும் துறந்து போராடிய தன்னலமற்ற தியாகிகள் பரம்பரை மறைந்துவிட்டது. காந்தி, நேரு, காமராசர், அண்ணா போன்று மனச்சாட்சிக்கு மதிப்புக் கொடுத்த தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் தீய சக்திகள் கட்டுக்குள் இருந்தன. இன்று அவை கட்டவிழ்ந்து தலை விரித்தாடுகின்றன. இன்று "தாதாக்கள்’ அரசியல் கடிவாளத்தைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். நம் நாட்டைக் கலக்கிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் சூதாட்ட நாயகர்கள், பயங்கரவாதத்தை உலகில் பரப்பும் தாவூத் இப்ராகிமும், அவன் தம்பி அனிஸ் இப்ராகிமும் தான் என்பது அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது. சூது என்பதற்கு உட்புரை என்ற ஒரு பொருளுண்டு. உடலின் உட்புறத்தில் ஆழமாகச் சீழ்பிடிப்பதை உட்புரை என்பர். சூதாட்டம் என்னும் சீழ், இந்தியச் சமுதாயத்தில் ஆழமாகப் புரையோடி இருக்கிறது. அறுவை மருத்துவம் செய்து அகற்றாவிடில் நமக்கு நல்ல எதிர்காலமில்லை. తి