பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ உனது தோகை புனையாச் சித்திரம் ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்! ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள் ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவுகள் மரகத உருக்கின் வண்ணத் தடாகம். தாமரை இலைத் தண்ணிர்த் துளிகளைக் கண்ணாடியில் தீட்டப்பட்ட ஓவியமாகவே வடித்துக் காட்டுகிறார் பாரதிதாசன். கண்ணாடித் தரையின் மீது கண்கவர் பச்சைத் தட்டில் எண்ணாத ஒளிமுத் துக்கள் இறைந்தது போல், குளத்துத் தண்ணிரிலே படர்ந்த தாமரை இலையும் மேலே தெண்ணிரின் துளியும் கண்டேன்; உவப்போடு வீடு சேர்ந்தேன். புறாவுக்கு ஒழுக்கமான ஓர் உண்வுப்பழக்கம் உண்டு. முண்டியடித்து முட்டிமோதும் பழக்கம் அவசர வாழ்க்கை வாழும் மனிதருக்குத்தான் உண்டு. பாரதிதாசனைக்கவர்ந்த இவ்வொழுக்கம் அழகான ஒவியமாகிறது. இட்டதோர். தாம ரைப்பூ இதழ்விரிந் திருத்தல் போலே வட்டமாய்ப் புறாக்கள் கூடி இரையுண்ணும். புறாக் கூண்டை மூடுவது கூட, ஒவியத்தைத் திரையிட்டு மூடுவதாகத்தான் அவருக்குப் படுகிறது. கூடடிடி மவலன் வந்து சாத்தினான், குழைத்து வண்ணம் தீட்டிய ஓவியத்தைத் திரையிட்டு மறைத்தல் போலே!