பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகு சந்தரம் -இ ஆனால் குஞ்சுகளுக்குத் தாயும் தந்தையும் மாறிமாறி உணவூட்டும் அன்புப் பரிமாற்றத்தைப் பறவைகளிடம் தானே காணமுடிகிறது; காய்ச்சிய பசுப்பாலையோ, சுவைநீரையோ, இளநீரையோ அருந்தும்போது அவற்றின் சுவையில் நாம் ஆழ்ந்து விடுகிறோம். அப்போது முகம் மலர்கிறது; நாக்கு சப்புக் கொட்டுகிறது. குடித்து முடித்தவுடன் முகத்தில் ஒரு நிறைவு ஏற்படுகிறது. கைக்குட்டையால் வாயைத் துடைத்துக் கொண்டு புத்துணர்ச்சியோடு நடை போடுகிறோம். இவை யாவும் அப்போது நம்மிடத்தில் தோன்றும் மெய்ப்பாடுகள். புறா நீர் அருந்தித் தன் வேட்கையைத் தணித்துக் கொள்ளும்போது, அதனிடத்தில் தோன்றும் மெய்ப்பாடுகளைப் பாரதிதாசன் இனிய நாடகமாக்கிக் காட்டுகிறார். அகன்றவாய்ச் சட்டி ஒன்றின் விளிம்பினில் அடிபொ ருந்தப், புகும்தலை; நீர்வாய் மொண்டு நிமிர்ந்திடும்; பொன் இமைகள் நகும்; மணி விழி நாற் பாங்கும் நாட்டிடும்; கீழ் இறங்கி மகிழ்ச்சியாய் உலவி, வைய மன்னர்க்கு நடைகற் பிக்கும். நாடகத்தில் காணப்படும் கம்பீரராஜநடை இங்கும் இடம் பெறுகிறது. நாடகம் என்றால் அதில் நாட்டியம் இருக்க வேண்டு மன்றோ? ஆடல்மகளான மயில் ஆடுகிறாள். எப்படி? தன் பக்க வாத்தியங்களோடு. அந்நாட்டியத்தை வியப்பார்வத்தோடு பாராட்டுகிறார் பாரதிதாசன். அழகிய மயிலே அழகிய மயிலே! அஞ்சுகம் கொஞ்ச, அமுத கீதம் கருங்குயி விருந்து விருந்து செய்யக்