பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பாவேந்தர் படைப்பில் அங்கதம்-இ) பாரதிதாசனுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அவரது பாடலைக் கேளுங்கள்! வானந்தான் பாடிற்றா? வானிலவு பாடிற்றா? தேனை அருந்திச் சிறுதும்பி மேலேறி நல்லிசை நல்கிற்றா? நடுங்கும் இடிக்குரலும் மெல்லிசை பயின்று மிக இனிமை தந்ததுவோ? வானூர்தி மேலிருந்து வல்ல தமிழிசைஞன் தானுர்தும் வேய்ங்குழலா? யாழா? தனியொருத்தி வையத்து மக்கள் மகிழக் குரல்எடுத்துப் பெய்த அமுதா?... என்று அடுக்கிக் கொண்டே போகிறார். வொர்ட்ஸ்வொர்த் காடுமேடெல்லாம் தேடித் திரிந்தும் கக்கூவைப் பார்க்க முடியவில்லை. ஆனால் வானம்பாடி கண்ணுக் கெட்டாத துரத்தில் பாரதிதாசனுக்குக் காட்சி வழங்கியது. உன்றன் மணிச்சிறகும் சின்ன கருவிழியும் என்றன் விழிகட்கே எட்டா உயரத்தில் பாடிக் கொண்டே இருப்பாய் என்று பாடுகிறார் கவிஞர். கீட்சு நைட்டிங்கேலின் இனிய குரலுக்குப் போதை தரும் பொருள்களான மதுவையும், கவிதையையும் ஒப்பிடுகிறான்; கொஞ்சங் கொஞ்சமாக உயிரைக் கொள்ளை கொள்ளும் ஹெம்லாக்' என்னும் நஞ்சையும் ஒப்பிடுகிறான். ஆனால் பாரதிதாசன் வானம்படியன குரலை 'ஏந்தும் வான் வெள்ளத்தில் கலக்கும் இன்பவெள்ளம்’ என்று குறிப்பிடுகிறார். விண்ணையும் மண்ணையும் இன்பவெள்ளத்தில் நனைக்கும் வானம்பாடியோடு பேச வேண்டும் என்ற ஆவல் கவிஞருக்கு ஏற்படுகிறது; பேசவும் செய்கிறார். வானம்பாடியிடம் கவிஞர் பேசும் கடைசி இரண்டு வரிகளும் இப்பாடலின் உயிர்நாடியாக அமைகின்ற்ன.