பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ)- முருகு கந்தரம் -இ அசையா மகிழ்ச்சி, அடைகநீ, உன்றன் இசைமழையால் இன்புறுவோம் யாம் என்று பாடலை முடிக்கிறார். கீட்சு, நைட்டிங்கேலின் பாடல் அமரத்தன்மை (immortality) வாய்ந்தது என்றும், மக்கள் வாழ்க்கை துன்பமும் சாவும் நிறைந்தது என்றும் பாடுகிறான். இங்கும் பாரதிதாசன் வானம்பாடியின் மகிழ்ச்சியை அசையா மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு அதன் நிலைபேற்றை நம் உள்ளத்தில் நினைவுபடுத்துகிறார். இத்தொடர் மூலம் மனிதனின் மகிழ்ச்சி அசையும் மகிழ்ச்சி என்பதைச் சொல்லாமல் சொல்கிறார். வானம்பாடியின் பாடலைக் கேட்ட போது ஏற்படும், இன்பம் கலந்த வியப்பு, குயிலின் பாடலைக் கேட்ட போதும் பாரதிதாசனுக்கு ஏற்படுகிறது. ஆக்காத நல்லமுதா! அடடாநான் என்சொல்வேன் விட்டுவிட் டொளிக்குமொரு மின்வெட்டுப் போல்நறவின் சொட்டுச் சொட் டொன்றாகச் சுவையேறிற் றென்காதில் என்று பாடுகிறார். இவ்வளவு சுவையான குரலை வெளிப்படுத்தும் அக்குயிலின் அலகையும் வாயையும் பாராட்ட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். கருநெய்தல் காட்டரும்பு போலும் குவிந்த இரண்டலகு தம்மில் பிரிந்து குரல் எடுக்க வாயிற் செவ்வல்லி மலர்கண்டு நான் வியந்தேன் - என்று பாராட்டி மகிழ்கிறார். குயிலின் அலகுக்குச் சாமணத்தையும் உவமை கூறுகிறார்.