பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகு சந்தரம் -இ ஒரு பெட்டை தன்ஆண் அன்றி வேறொன்றுக் குடன்படாதாம் ஒருபெட்டை மத்தாப் பைப்போல் ஒளிபுரிந் திடநின் றாலும் திரும்பியும் பார்ப்ப தில்லை வேறொரு சேவல்! தம்மில் ஒருபுறா இறந்திட்டால் தான் ஒன்றுமற் றொன்றை நாடும் நம்மிடத்தில் நிலவும் பலதார மணத்தையும், சின்ன வீட்டுப் பழக்கத்தையும் இப்பாடலில் நயமாகக் கண்டிக்கிறார் பாரதிதாசன். விட்டு விடுதலையாகி நிற்பாய் - இந்தச் சிட்டுக் குருவியைப் போலே என்று பாடினான் பாரதி. சிட்டுக்குருவி பாரதிக்கு விடுதலையின் சின்னம். பாரதிதாசன் விடுதலை உணர்ச்சியைச் சுதந்திரம் D பாடலில் பச்சைக்கிளியை வைத்துப் لأن فة பாருக்குணர்த்துகிறார். தித்திக்கும் பழமும் மதுரப் பருப்பும் உண்டு 'பொன்னே மணியே!” என்ற போற்றுதலுக்கு மயங்கித் தச்சன் கூடே சதமாக வாழ்கிறது ஒரு பச்சைக்கிளி. அந்த வசதியான வாழ்க்கை அதற்குப் பழகிப் போய்விட்டது. என்றாலும், வானவீதியில் வந்து திரிந்து, தென்னங்கீற்றுப் பொன்னுரசல் ஆடிச், சோலை பயின்று சாலையில் மேய்ந்து விண்ணையும் மண்ணையும் வசமாக்கித் திரியும் மற்ற கிள்ளைகளைப் பார்த்து அவற்றைப் போல் தானும் பறக்க நினைக்கிறது. இந்த ஏக்கத்தை 'அக்கா அக்கா' என்று விளித்து வெளிப்படுத்துகிறது. ஆனால், அக்கூண்டுக் கிளியைப் பார்த்து விடுதலை என்பது கடைத்தெருவில் விற்கும் சுக்கைப் போல் மிளகைப்போல் அவ்வளவு எளிதில் கிடைக்கக் கூடியதன்று.