பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் 1 அங்கதம் என்பது ஒருவகைச் செய்யுள் உத்தி. அங்கதப்பாக்கள் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே த்மிழில் இருந்திருக்கின்றன. அதனாற்றான் தொல்காப்பியர் தம் செய்யுளியலில் அங்கதப்பாவிற்கு இலக்கணம் கூறியிருக்கிறார். அங்கதம் தானே அரில்தபத் தெரியின் செம்பொருள் கரந்ததுஎன இருவகைத்தே என்றும் செம்பொருளாயின் வசை எனப்படுமே என்றும் மொழிகரந்து சொல்லின் அதுபழி கரப்பாகும் என்றும் இலக்கணம் கூறுகிறார். மற்றுமோர் நூற்பாவில், வசையொடும் நசையொடும் புணர்ந்தன்றாயின் அங்கதச் செய்யுள் என்மனார் புலவர் என்று மேலும் விளக்குகிறார். அதன் அடியளவு பற்றிக் குறிப்பிடும்போது எவ்வகைப்பாவில் ئي {2ئىil எழுதப்படுகிறதோ அப் பாவின் அடியளவு பெற்றுவரும் என்றும் குறிப்பிடுகிறார். ஆனால் காரிகையாசிரியர் அங்கதப் பாவினை அடியின்றி நடப்பன என்ற வகையுள் அடக்குவார். ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் என்பது வசையொடு கூடிய செம்பொருள் அங்கதம்.