பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகு சந்தரம் -இ கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ரோம் நாட்டு இலக்கிய வாதிகளான ஹொரேஸ், பெர்சியஸ், ஜூவெனில் ஆகிய மூவரையும் அங்கதக் கலையின் முன்னோடிகள் என்று கூறலாம். அவர்களுள் ஹொரேஸ், “மாந்தரிடம் படிந்திருக்கும் குற்றங்களைத் தோலுரித்துக் காட்டுவது எனது நோக்கமன்று; அவர்களைத் திருத்துவதே என் நோக்கம்” என்று குறிப்பிடுகிறார். இவர் ஓர் நம்பிக்கை asso (Optimist) ஆனால் ஜூவெனில் என்பவர் தவறு செய்யும் மக்களினத்தையே வெறுப்பவர். "மக்களிடத்தில் இயல்பாகப் படிந்திருக்கும் குற்றங்கள் திருத்த முடியாதவை. அவர்கள் வெறுப்பிற்கும் கண்டனத்துக்கும் உரியவர்கள்” என்பது இவர் கருத்து. இவர் ஒரு சோர்வாளர் (Pessimist). ஹொரேஸ் நோயைக் குணப்படுத்தும் மருத்துவர் போன்றவர். ஆனால் ஜூவெனில் தண்டனை நிறைவேற்றும் அதிகாரி போன்றவர். ஆங்கிலக் கவிஞர்களுள் ஜான்டன், டிரைடன், அலெக்சாண்டர் போப், ஸ்விஃப்ட், பைரன் ஆகியோர் புகழ்பெற்ற அங்கதப் படைப்பாளிகள். ஜான்டன் இங்கிலாந்து நாட்டில் நிலவிய அரசியல், சமயக் குறைபாடுகளை நயம்பட, புலமை நுட்பத்தோடு தன் அங்கதப்பாடல்களில் சுட்டிக் காட்டுகிறான். அவன் பாடல்கள் அப்போது ஆட்சி புரிந்த மன்னரின் கொள்கைகளுக்குக் கேடயமாக விளங்கின. அலெக்சாண்டர் போப் தன் இலக்கிய எதிரிகளை ஆற்றல் மிக்க அங்கதக் கணைகளால் முறியடித்தான். ஜோனாதன் ஸ்விஃப்ட் மக்கள் இனத்தையே வெறுத்தவன். அவனது கலிவர் யாத்திரைகள் (GulliversTravels) மக்களினத்தின் குற்றங்களைக் கடுமையாகப் பழிக்கும் அங்கதநூல்.