பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் குறையுடைய மனிதனை டிரைடன் அரசியல் விலங்கு (Palitical creature) என்றும், அலெக்சாண்டர் போப் சமுதாய விலங்கு (Social animal) என்றும், ஸ்விஃப்ட் விலங்கு மனிதன் (animal called man) argi, pțub 5,9 h îl (5)giran gării. கவிஞர் பைரன் சமுதாயத்துக்கு எதிரான சக்திகளின் குறியீடாக ‘டான் ஜூவான்’ என்ற காப்பியத்தை எழுதியிருக்கிறான். பிரெஞ்சு எழுத்தாளர் வால்டையரும், ஸ்பானிய எழுத்தாளர் செர்வாண்டிசும் அங்கதத் துறையில் சாதனையாளர்கள். செர்வாண்டிசின் ‘டான் க்விக்சாட் உலகப்புகழ் பெற்ற அங்கதப் புதினம். இந்த நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர்களுள் பெர்னாட்ஷா சிறந்த அங்கத எழுத்தாளர். அவர் எழுதியுள்ள இன்னாத நாடகங்கள் (Plays umpleasant) முன்னுரையில் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதவை, தாங்கிக் கொள்ள முடியாதவை என்று சிலவற்றைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். அவையாவன : அன்றைய மக்களின் ஒழுக்கக்கேடு, அன்றைய சமயம், போரினாலும் தீவிரவாதத்தாலும் நேரும் கொடுமைகள், விளையாட்டுத்துறை, கொல்களம் (butcher's yard), நவநாகரிகச் செல்வர் கூட்டம். அவர் எழுதிய நாடகங்களும் அவற்றின் முன்னுரைகளும் மக்கள் முன்னேற்றத்துக்காக ஆழ்ந்து சிந்தித்து எழுதப்பட்ட கருத்துக் களஞ்சியங்கள்.