பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ 2 பாவேந்தர் பாரதிதாசனுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆங்கில இலக்கியப் பயிற்சியும் இல்லை. புதுவைப் பொதுமக்கள் பேச்சு வாக்கில் கையாளும் பிரெஞ்சுச் சொற்கள்தாம் அவருக்குத் தெரியும். உடன் பணி செய்த பிரெஞ்சு ஆசிரியர்களிடம் பிரெஞ்சு இலக்கியங்களைப் பற்றியும், இலக்கிய வாதிகளைப் பற்றியும், வாய்மொழியாகக் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாமே தவிர, பிரெஞ்சு இலக்கியங்களை நேரடியாகப் படிக்கும் வாய்ப்பும் அவருக்கில்லை. இவர் ஒரு தனித்தமிழ்ப்புலவர். என்றாலும் மேலைநாட்டு அங்கத உத்தி இவருக்கு எப்படியோ கைவந்திருப்பது வியப்பிற்குரிய செய்தி : பெர்னாட்ஷாவைப்போல் இவரால் சமரசம் செய்து கொள்ள முடியாதவை தமிழ்நாட்டில் பல. தீண்டாமை, வறுமை, கைம்மை, மூடநம்பிக்கை, கடவுள் நம்பிக்கை, சாதி, அரசியல் அடிமைத்தனம், தாய்மொழிப் புறக்கணிப்பு, இந்தித் திணிப்பு என்பன அவை. இக்கொடுமைகளை எதிர்த்துச் செம்பொருள் அங்கதமாக அவர் எழுதியுள்ள வசைப்பாடல் அளவற்றவை. அண்டை வீட்டின் அறையி லிருந்து பழுத்துக் காய்ந்த பனை ஓலைமேல் கூடல்வாய்த் தண்ணிர் கொட்டும் ஒசை வந்தது; சென்று பார்த்தேன் இந்திப்பாடம் நடத்தினார் ஈச்வரே! இஃது இந்தி எதிர்ப்புப் பாடல்.