பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ பொற்புடை முல்லைக் கொத்தில் புளியம்பூ பூத்ததென்றல் சொற்படி யார்நம்புவார் - சகியே சொற்படி யார் நம்புவார்? இது வருண எதிர்ப்புப் பாடல் வாடப் பலபுரிந்து வாழ்வை விழலாக்கும் மூடப் பழக்கத்தைத் தீதென்றால் முட்டவரும் மாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே பூட்டவந்த ஈடற்ற தோழா, இளந்தோளா கண்ணுறங்கு! இது மடமை எதிர்ப்புப் பாடல். ஒடப்ப ராயிருக்கும் ஏழை யப்பர் உதையப்ப ராகிவிட்டால் ஒர் நொடிக்குள் ஒடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ இது வறுமை எதிர்ப்புப் பாடல் செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க நந்தமிழர் உள்ளத்தில், வையம் நடுங்கும் வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே. பாலோடு நேர் தமிழும் பைந்தமிழும் மக்களும் ஆலோடு வேர் என் றறிந்திருந்தும் ஆளவந்தார் மேலோடு பேசி விடுவரேல் அவ்வாட்சி சாலோடு நீரென்று சாற்றாய் கருங்குயிலே. இஃது அரசியல் எதிர்ப்புப் பாடல்.