பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ செல்வர்களுக்கு, வரதட்சணை அவர்கள் தகுதியை வெளிப்படுத்தும் ஒர் அளவுகோலாக இருக்கலாம். ஆனால் பெண்களைப் பெற்ற ஏழைகளுக்கு அது கசையடி படித்துப் பட்டம் பெற்று, அரசாங்கப் பதவியில் இருக்கும் தம் பிள்ளைகளின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்வதில் பெற்றோர்கள் குறியாய் இருந்தனர். பெண் படித்த வளா, அறிவுள்ள வளா, அழகானவளா குடும்பத்துக்கேற்றவளா என்பதைவிட அவள் சுமந்துவரும் நகைகளின் எடை, அவள் கொண்டு வரும் வரதட்சணை, பேழைப் பணம் ஆகியவற்றின் அளவு, ஆகியவற்றிலேயே அவர்கள் கவனம் இருந்தது. பெற்றோரின் இந்தப் பேராசையையும் அறிவீனத்தையும் பெண் குரங்குத் திருமணம் என்ற பாடலில் எள்ளி நகையாடுகிறார் பாவேந்தர். ஏழை அண்ணாசாமி தன் மகனுக்குப் பணக்காரர் வீட்டில் பெண் தேடுகிறான். ஏழையின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட அப்பணக்காரன் உன் மகனுக்குப் பெண் கொடுப்பதில் தடையேதுமில்லை ஆனால். என்று இழுக்கிறான். "ஆனால் என்ன?’ என்று கேட்கிறான் ஏழை. அதற்குப் பணக்காரன், : பெற்ற பெண்ணைக் கொடேன் வளர்க்கின்ற பெண்ணுண்டு பேச்செலாம் கீச் என்றனன். அதற்கு அண்ணாசாமி, “பெண்ணுக்குக் கீச்சுக்குரல் அவ்வளவு தானே? பரவாயில்லை. அதற்காக வரதட்சணையை வளர்ப்புப் பெண்ணுக்குக் குறைவாகவா கொடுக்கப் போகிறீர்கள்?’ என்று சாதுரியமாகப் பேசினான்.