பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாவேந்தர் படைப்பில் அங்கதம் என் பெண் இரட்டை வால் அல்ல என்றான் செல்வன். உங்கள் பெண் அடக்கமானவள் என்பதை இவ்வாறு குறிப்பிடுகிறீர்கள். மகிழ்ச்சிதான் என்றான் ஏழை அண்ணாசாமி. என்றன் பெண் - கால்வரைக்கும் கருங்கூந்தல் என்றான் பணக்காரன். "ஒட்டு மயிர் வைத்து அலங்களித்துக் கொள்ளும் இக்காலத்தில் கால்வரையிலும் நீண்ட கருங்கூந்தல் சிறப்புத்தானே?’ என்று மகிழ்ந்து கூறிய அண்ணாசாமி திருமணத்துக்கு நாள் குறித்தான். அண்ணா சாமியின் அறியாமையையும், அளவற்ற பேராசையையும் கவிஞர் கீழ்க்கண்ட வரிகளால் அளந்து காட்டுகிறார். கண்ணுள்ள மகனுக்குத் தந்தைநிய மித்த பெண் கழுதையா? அல்ல அதுதான் பெரும் பணக்காரன் வளர்த்திட்ட ஒற்றைவால் பெட்டைக் கருங்குரங்கு பீடு சுய ம்ரியாதை கண்டு நல முண்டிடும் பெரிய என் அன்னைநாடே! பணக்காரன் தகுதி தெரியாமல் தன்னிடம் பெண் கேட்க வந்த ஏழை அண்ணாசாமியைக் கேவலப்படுத்த நினைக்கிறான். தன் எண்ணத்தைப் பேச்செலாம் கீச்", 'இரட்டைவால் அல்ல', கால்வரைக்கும் கருங்கூந்தல் என்ற சொற்றொடர்களால் குறிப்பாக வெளிப்படுத்துகிறான். ஏழையின் பேராசை அவன் அறிவைக் குருடாக்கிவிட்டது. இப்பாடலில் அமைந்துள்ள கற்பனை