பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ)- முருகு கந்தரம் -இ குப்பன் அவள் விருப்பப்படி அம்மூலிகைகளைப் பறித்துக் கொடுக்கிறான். முதலில் ஒரு மூலிகையைச் சாப்பிட்டவுடன், இத்தாலியர், ஆங்கிலேயர், அமெரிக்கர், பிரெஞ்சியர் பேசும் பேச்சுக்கள் இவர்கள் காதில் விழுகின்றன. பிறகு அநுமன் சஞ்சீவி பர்வதத்தை வேரோடு பறித்தெடுத்து விண்ணில் எழும்பும் செய்தியும், கண்ணாடிப் பாத்திரத்தைக் கல்தரையில் வைப்பது போல், வைக்கும் செய்தியும், அவர்கள் காதில் விழுகின்றன. மற்றொரு மூலிகையைச் சாப்பிட்டதும், ஒரு பட்டை நாமக்காரப் பாகவதன் இராமாயணப் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் காட்சி அவர்கள் கண்ன்னில் படுகின்றது. இதைக் கண்டதும் குப்பன் தன் அறியாமைக்கு வருந்துகிறான். இதுதான் காப்பியக்கதை. இராமாயணத்தில் வரும் சஞ்சீவி பர்வதத்தை நிகழிடமாகக் கவிஞர் தேர்ந்தெடுத்த நுட்பம்தான், இக்காப்பியக் கருப்பொருளின் (theme) வெற்றி. இந்திய மக்களின் மடமையும், சாதி மதங்களால் மக்களிடையே ஏற்பட்ட ஒற்றுமைச் சிதைவும், பிறநாட்டு மக்கள் இந்நாட்டு மக்கள் மீது கொண்டிருந்த தாழ்வான எண்ணங்களும், பெளராணிகர்களின் சுரண்டல்களும், சமுதாயச் சீர்திருத்த மில்லாமல் பெறும் விடுதலையின் கேடுகளும் இக்காப்பியத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றன. இவர் வெளிப்படுத்தும் அங்கதக் கருத்துக்கள் கூரம்புகளாகப் பாய்கின்றன. நாம் சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேயர்கள் நம்மைப்பற்றி என்ன நினைத்தார்கள் என்பதை ஒர் ஆங்கிலேயன் பேச்சு மூலமாகவே சுட்டிக் காட்டுகிறார். ஒஎன் சகோதரரே! ஒன்றுக்கும் அஞ்சாதீர்! நாவலந் தீவு நமைவிட்டுப் போகாது! வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்களென்றால் குழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்: