பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகு சந்தரம் -இ என்று சாக்குருவி போல் கத்திக் கொண்டிருக்கின்றன. மக்கள் வாழ்க்கையில் நம்பிக்கையைக் குலைத்து அவர்களைச் சோர்வாளர்களாக (Pessimist) ஆக்குகின்றன என்பதையும் அவன் சுட்டிக் காட்டுகிறான். சாதிப்பிரிவு சமயப் பிரிவுகளும் நீதிப் பிழைகள் நியமப் பிழைகளும், மூடப் பழக்கங்கள் எல்லாம் முயற்சி செய்தே ஒடச் செய்தால் நமையும் ஒடச் செய்வார் என்று இந்திய மக்களின் இயலாமையைச் சுட்டிக் காட்டி அவனே திருப்திப்பட்டுக் கொள்கிறான். நம் நாடு முன்னேறுவதற்கும், விடுதலை பெறுவதற்கும் உள்ள தடைக்கற்கள் யாவை என்பதைப் பாவேந்தர் போல் துணிச்சலாக எந்தத் தமிழ்க் கவிஞனும் சுட்டிக் காட்டவில்லை. இராமன் அருள் பெற்ற அதுமன் சஞ்சீவி பர்வதத்தைத் துக்கிப் போய்க் கடலில் வீசப்போகிறான் என்று அஞ்சி நடுங்கிய குப்பனின் அறியாமையை வஞ்சி, ராமனெங்கே! ராமன் அருளெங்கே! சஞ்சீவி மாமலையைத் துரக்குமொரு வல்லமைஎங்கே! இவற்றில் கொஞ்சமும் உண்மை இருந்தால்நாம் கொத்தவரைப் பிஞ்சுகள்போல் வாடிப் பிழைப்ப தரிதாகி அடிமையாய் வாழோமே! ஆண்மைதான் இன்றி மிடிமையில் ஆழ்ந்து விழியோமே! என்று கூறி நகையாடுகிறாள். ஐயா இதைவிழுங்கி அவ்விடத்தில் பாருங்கள் என்று வஞ்சி மூலிகையைக் கொடுத்தாள். அதைத் தின்று விட்டுக் குப்பனும் பார்த்தான்.