பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


-- பாவேந்தர் படைப்பில் அங்கதம் -15) இந்நூற்றாண்டில் வாழும் பெண்ணியவாதிகள் குடும்ப விளக்கைப்பற்றிச் சில மாறுபட்ட கருத்துக்களைக் கூறாமல் இல்லை. குடும்ப விளக்கில் பெண்ணுக்குத் தலைமையிடம் கொடுத்துப் பாடியிருந்தாலும், பெண்ணை ஓயாமல் பணி புரியும் ஒர் இயந்திரம்போலப் படைத்திருக்கிறார் என்று சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் குடும்ப விளக்கின் தலைவி இருபதாம் நூற்றாண்டுப் பெண்களைப் பிரதிபலிக்கவில்லை என்பதும், அவள் கணவன் என்னும் கதிரவனைச் சுற்றிச் சுற்றி வரும் ஒரு கோளாகவே காட்சியளிக்கிறாள் என்பதும் அவர்கள் குற்றச்சாட்டு. சங்க காலந் தொட்டுப் பெண்கள் எப்படியிருக்க வேண்டும் என்று இலக்கியங்களும் நீதிநூல்களும் வற்புறுத்துகின்றனவோ அதையே நாகரிகமாகப் பாவேந்தர் வற்புறுத்துகிறார். அவர் சீர்திருத்தவாதி என்பதால், தம் கற்பனைத் தலைவி நற்பண்புகளோடு கல்வியும் கற்று அறிவு நலம் மிக்கவளாகத் திகழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். இதுவே குடும்ப விளக்கின் மையக் கருத்து. குடும்ப விளக்கில் வரும் முதியோர் காதல் வேறு யாரும் தொடாத புதிய கருப்பொருள். குடும்ப விளக்கை ஒரு குடும்பக் காப்பியம் (Family epic) என்று சொன்னால் அவர் படைத்துள்ள இருண்ட வீட்டை ஒர் எள்ளல் குடும்பக் காப்பியம் (Family mock epic) என்று சொல்லலாம். இதுவும் அங்கதப் பாணியில் எழுதப்பட்டுள்ளது. குடும்ப விளக்கு ஒரு வெற்றிக் காப்பியமாக அமைந்து மக்களின் வரவேற்பைப் பெற்றவுடன், அதற்கு மாறான ஒரு காப்பியச் சிந்தனை அவர் மூளையில் பளிச்சிட்டிருக்கிறது. இதைக் குடும்பவிளக்குக்கு ஒப்பாகச்