பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் 母颂 எக்கறியில் நாட்டம் இவர்க்கென்று நீயுணர்ந்தே அக்கறியை மேன்மேலும் அள்ளி வை... என்பது குடும்ப விளக்கின் தலைவிக்கு மாமி கூறும் அறிவுரை. ஆனால் இருண்ட வீட்டில், வந்த விருந்தாளி கேவலப்படுத்தப்படுகிறார். விருந்தாளி தான் பசியோடிருப்பதை, விடிய நாலுக்கு வீட்டை விட்டுக் கிளம்பி னேனா? கிளிய னுாரில் சிற்றுண வுக்குச் சுற்றிப் பார்த்தேன் அகப்பட வில்லை; அதற்குள் வண்டியும் புறப்பட் டதனால் பொசுக்கும் பசியுடன் ஏறினேன், இங்கே இழிந்தேன் என்றான். இந்தக் கதையை இயம்பித் தனது பொறுக் கொணாப் பசியைப் புகன்றான். வந்த விருந்தாளி வெட்கத்தை விட்டு இப்படி விளம்புகிறான். 'இழிந்தேன்’ என்ற சொல் இறங்கினேன்’ என்றும் கேவலப்பட்டேன் என்றும் பொருள்படக் கவிஞரால் கையாளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பசிக்கு உணவு கிடைக்காது என்பதை அறிந்து அருகிலிருந்த உணவு விடுதிக்குச் சென்று உண்டு வந்தான் விருந்தாளி, வேலைக்காரி பாலைக் காய்ச்சி நாலைந்து செம்பு நன்றாய்க் குடித்தபின், தலைவிக்கும் கொடுத்தாள். பின்னர் விருந்தாளியைப் பார்த்து, “காப்பி கீப்பி சாப்பிடுகின்றீரா? ஏற்பாடு செய்யவா?"என்று கேட்டாள். இருண்ட வீட்டுத் தலைவியின் விருந்தோம்பல் மகத்துவம் இது. வந்த விருந்தாளியோ தலைவியின் சொந்த உடன்பிறப்பு. எப்போதுமே பெண்கள் தம் பிறந்த வீட்டார்