பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகு சந்தரம் -இ வந்தால் பெருமதிப்புக் காட்டுவர். ஆனால் இருண்ட வீட்டுத் தலைவியோ அதற்கும் புறநடை குடும்ப விளக்கின் தலைவி காலையில் எழுந்ததும் 'வீட்டை நிறம் புரிந்தனள்’ என்று கூறி, இல்லத் தூய்மையைச் சுட்டிக் காட்டுகிறார் பாவேந்தர். ஆனால் இருண்ட வீடு எப்படி இருந்தது? வீட்டினில் காற்று வீசுந் தோறும் மோட்டு வளையில் மொய்த்த ஒட்டடை பூமழை யாகப் பொழியும் தரையில் ஊமைக் குப்பைகள் உம்மென்று மேலெழும். குழந்தை கிடந்த கூட மெல்லாம் உழுந்து கிடந்த ஒருகளம் போலவும் வேம்பின் பழம்பூ விரிதரை போலவும் ஈயின் காடும் எறும்பின் காடும் ஆயிற்று...... “உழுந்தின் களம் ஈ மொய்க்கும் தரைக்கும் 'வேம்பின் பழம்பூ விரிதரை எறும்பு மொய்த்த வீட்டுத் தளத்துக்கும் பொருத்தமான உவமைகள். குடும்ப விளக்கில் மணவழகர் குடும்பம் தமிழோசையும், யாழிசையும், விருந்தோம்பலும் பண்பாடும் பகுத்தறிவும் நிறைந்த இடமாகக் காட்சி அளிக்கிறது. ஆனால் இருண்ட வீட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது, அறிவெனும் வெளிச்சம் அங்கே இல்லை மடமை மட்டும் மகிழ்ந்து கிடந்தது என்று கூறுகிறார் கவிஞர். வயிற்றின் உப்பலால் வாயிலாக் குழந்தை உயிரை இழக்க ஒப்பாது கிடந்தது இந்த வீட்டில் இருளன் புகுந்ததால் நொந்தது குழந்தை நோயால்