பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாவேந்தர் படைப்பில் அங்கதம் வாலன் என்னும் மந்திரக் காரனை அழைக்கின் றேன்என்று அறைந்தாள் சங்கிலி. இருண்ட வீட்டை மடமை எவ்வாறு ஆட்கொண்டிருக்கிறது என்பதை மேலே சுட்டிய வரிகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இருண்ட வீட்டின் தலைவி தூங்குமூஞ்சி என்பதை, நவாப்புக் குதிரை நாடு முழுவதும் சவாரி வந்து தரையில் புரளல்போல் படுத்துப் புரண்டு பிடித்தாள் தூக்கம் என்று நயம்படச் சித்திரிக்கிறார் பாவேந்தர். கணவன் மனைவி குடும்பச் சண்டையையும் சுவைபட எடுத்து வைக்கிறார். எங்கிருந் தாயடி என்குடிக் கிப்படி மங்கிப் போக வைத்தாய் காலடி பொங்க லாண்டி யாகப் போம்படி புரிவ தெல்லாம் மிகவும் அழும்படி இது தலைவனின் பல்லவி, ஊருக் கழித்தாய் உருப்படவா நீ நாட்டுக் கழித்தாய் நலம்பட வாநீ இனியும் ஊரில் எடுபட வாநீ இது தலைவியின் அனுபல்லவி, மலைக் குரங்கா மனிதரா அவர்தாம்? கோணங்கி ஆடிக் கொக்க ரித்தார் ஆணாய்ப் பிறந்தால் அமர்க்கை வேண்டும் இவர்போல் மனிதரை யான்பார்த்த தில்லை கவரா கல்லா சொல்வதைப் பொறுக்க? மூச்சு விட்டாலும் ஆச்சா என்கிறார் சீச்சி இவரொரு சின்னப் பிறவி! இது தலைவியின் கோடி அருச்சனை.