பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இ- முருகு சந்தரம் -இ குழப்பமும் குளறுபடியுமாக இருந்த இருண்டவீடு இறுதியில் கொலை கொள்ளையில் முடிவடைகிறது. சுருக்கமான இக்காப்பியம் நறுக்குத் தெரித்தாற்போல் சில காட்சிகளைக் கண்முன் நிறுத்தி நிறைவு பெறுகிறது. பாரதிதாசனுக்குப் பிறகு உவமைக் கவிஞர் சுரதா சில அங்கதப் பாடல்களை எழுதியிருக்கிறார். இன்றைய புதுக் கவிஞர்கள் அங்கதக் கூறுகள் அடங்கிய தனிப்பாடல்கள் நிறைய எழுதுகின்றனர். அங்கதக் காப்பியம் எழுதும் முயற்சியில் யாரும் ஈடுபடவில்லை.