பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ மூலமாகவும், புதுவையிலிருந்து வெளியான தேசசேவகன், பூரீசுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம், சுதந்திரன் போன்ற ஏடுகள் மூலமாகவும் அறியக் கிடக்கின்றன. முனைவர் இளவரசு எழுதியுள்ள இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன் என்னும் நூல் இவற்றை விரிவாக ஆய்வு செய்கிறது. தீவிரவாதியாக இருந்த கவிஞர் பாரதிதாசன் காந்தியவாதியாக மாறி 1920 ஆம் ஆண்டு சத்தியாக்கிரக இயக்கத்திலும் பங்கெடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கல்கத்தா காங்கிரசில் உருவான ஒத்துழையாமை இயக்கத்தைப் பாராட்டி வ.ரா. வின் சுதந்திரன்’ இதழில் பாரதிதாசன் எழுச்சி மிக்க கவிதைகள் எழுதினார். அடிமை உறக்கத்தில் ஆழ்ந்து கிடந்த பாரதத்தைத் தட்டி எழுப்புவதற்கும், முழு விடுதலை அடைவதற்கும் பதினெட்டுக் கூறுகள் கொண்ட நிர்மாணத் திட்டம் ஒன்றை காந்தியடிகள் மக்கள் முன் வைத்தார். அதன் கொள்கைகளை அப்படியே ஏற்று அவற்றுக்கு இலக்கிய வடிவம் தந்தார் பாரதிதாசன். காந்திய இயக்கத்தைப் பரப்பும் நோக்கில் பாரதிதாசன் இயற்றி, அச்சான நூல்கள் மூன்று, அவை ‘சிறுவர் சிறுமியர் தேசியகீதம்’ ‘தொண்டர் படைப்பாட்டு’ “கதர், இராட்டினப் பாட்டு’ என்பன. கதர் இராட்டினப் பாட்டை வெளியிடக் காசில்லாமல், தம் மனைவி பழனியம்மாளின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை விற்று அதை வெளியிட்ட செயல், கவிஞரின் கொள்கை வெறிக்குச் சான்று.