பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ என்று கதர்ப்பாட்டைப் பாடியதோடு அமையாமல், பாரதிதாசன் கதர்மூட்டையைத் தோளிலும் சுமந்து விற்றார். காந்தியடிகளின் நிர்மாணத் திட்டங்களுள் குறிப்பிடத்தக்கது தேசியக் கல்வித்திட்டம். "ஆங்கிலக் கல்வியால் படித்த மக்களுக்கும் பாமர மக்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி ஏற்பட்டுவிடும். பாமரமக்களின் உள்ளம் வளர வழியின்றிச் சிறைப்பட்டே இருக்கும். அதனால் சுயராஜ்ஜியத்தை நிர்ணயம் செய்வதில் பாமரமக்கள் எந்தப் பங்கும் வகிக்க முடியாது” என்று மிகுமக்கள் நலனுக்கு எதிரான ஆங்கில மோகத்தைச் சுட்டுகிறார் காந்தியடிகள். இக்கருத்தை வலியுறுத்த வந்த பாரதிதாசன், செந்தமிழாற் கம்பன் சிறந்தானா நேற்றிங்கு வந்தவரின் ஆங்கிலத்தால் இன்பம் வளர்த்தானா? அருச்சுனன்போல் கண்ணன் போல் ஆக நினைத்தால் மருளுட்டும் ஆங்கிலத்தை மாய்ப்பீர் உம் சிந்தையிலே... வந்தவர்.பால் நீங்களெல்லாம் வாங்கியுண்ணக் கற்றிர்கள் நொந்த உமதுகுலம் ஈடேற நோக்கிரோ என்று பாடுகிறார். உடை உணவு, மருத்துவம், வழிபாடு ஆகியவற்றிலும் வெள்ளையரைப் பின்பற்றி வந்த இழிநிலையை, ஒத்துழையாமை இயக்கம் வன்மையாகக் கண்டித்தது. பாரதிதாசனும் இப்பண்பாட்டுச் சீரழிவை நீசநாகரிகம்’ "ஸ்வதர்மம் முதலிய பாடல்களில்,