பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ எங்கணும் பசுச்சாலை - பசு எழுந்ததும் எழும்பசிக் குணவிடுக - இனி எங்கணும் புல்வெளிகள் - தன் னிச்சையில் மேய்ந்திட ஆள்விடுக - மனம் பொங்கிடும் இசைப்பாட்டில் - பசு பூரிக்க இடையிடை புரிந்திடுவீர் - உல கெங்கணும் பசுக்குளங்கள் - அதன் இன்னுடல் அழுக்கறத் தேய்த்திடுவீர், எனப் பசுப்பாதுகாப்பைத் தம் பாடலில் வலியுறுத்திப் பாடுகிறார். காந்தியத்தின் பன்முகப்பட்ட பணிகளுள் மதுவிலக்குக் கொள்கை சிறப்பிடம் பெற்றது. இதைப் பற்றிக் குறிப்பிட்ட காந்தியடிகள், “சமூகத் துறையிலும், நல்லொழுக்கத்துறையிலும் இதுவொரு ஜீவாதாரமான சீர்திருத்தம். எனினும் காங்கிரசார் இதில் நியாயமாக எவ்வளவு ஆர்வம் காட்ட வேண்டுமோ, அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. மதுவிலக்கில் ஈரோடு மட்டுமே அஞ்சாது பணியாற்றி வருகிறது. அதனால் பூரீமான் இராமசாமி நாயக்கருக்கு ஒரு மாதச் சிறைத் தண்டனை பரிசாகக் கிடைத்திருக்கிறது” என்று தமது "யங் இந்தியா' இதழில் பாராட்டி எழுதியுள்ளார். மேல்நாட்டு மதுவுக்குப் புகழ்பெற்ற புதுச்சேரியில் வாழ்ந்த பாரதிதாசன், மதுவிலக்குப் பணியிலும் தம்மை இணைத்துக் கொண்டு பாடிய மூன்று பாடல்கள் இப்போது கிடைத்துள்ளன. குடியர்கள் குடிப் பழக்கத்திலிருந்து மீண்டு தெளிவு பெற்றுப் பாரததேவியிடம் கூறுவதாக ஒரு பாடல் : அம்மா இனிக்குடிக்க மாட்டோம் அதன்தீமை கைமேற் கனிபோலக் கண்டுவிட்டோம் ஏழைகள் பொய்ம்மானைப் பின்பற்றி ராமன் புரிந்ததுபோல் இம்மதுவின் மாயங்கண் டிடறித் தலைகவிழ்ந்தோம்