பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சுந்தரம் -இ இருக்கிறார். இருப்பினும் அவர் காந்திய வாதியாக இருந்த காலத்தில், போய்த்தொடு வோம் அந்த விண்ணை அமுதத்தைப் பூமிக்கெலாம் தருவோம் தாய்கொடுத் தாளிந்தச் சத்திய வேலென்று தாரணி ஆண்டிடுவோம் ஏழைகள் கையிருப் புள்ளவர் என்னும் இரட்டையைக் கொன்றிடுவோம் கூழுக்கொருத்தன் அழும்படி ஆண்டிடும் கோலை முறித்திடுவோம் என்று பாடிய பாடல் குறிப்பிடத்தக்கது. “இந்நாட்டுச் சேரிகளில் அரிஜனங்கள் தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள கொடுமைக் கொப்பான கொடுமை உலகில் வேறெங்கிலும் இல்லை. தீண்டாமை இந்து மதத்துக்கு ஏற்பட்ட மாசு சாபம்' என்று காந்தியடிகள் கூறியுள்ளார். இளமை தொட்டே பாரதிதாசனுக்கும் அரிஜன. மக்களுக்கும், நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. ‘புதுவை மாநிலத்து அரிஜன மக்களின் குரலாகவே பாவேந்தர் விளங்கினார். பெரும்பாலான கிராம அரிஜனத் தலைவர்கள் அவரது சீடர்கள்’’ என்று குறிப்பிடுகிறார் பழம்பெரும் தேசிய வாதியும், சர்வோதயத் தலைவருமான எஸ். ஆர். சுப்பிரமணியம். இதந்தரும் சமநோக்கம் இல்லா நிலத்தில் நல்ல சுதந்தரம் உண்டாகுமோ? என்பது தான் பாரதிதாசனின் முதல் கேள்வி. 'பஞ்சமர் பார்ப்பனர் என்பதெல்லாம் பாரதநாட்டுப் பழிச்சின்னத்தின் பேர்’ என்பது அவர் கருத்து. தீண்டாமை என்னுமொரு பேய் - இந்தத் தேசத்தில் மாத்திரமே திரியக் கண்டோம் - எனில்