பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகு சந்தரம் -இ வேட்கை இருக்குதடி இந்த நேரத்தில் வெற்றி இருக்குதுபார் எதிரே நாட்டில் விடுதலை என்பதோர் நற்பதம் நம்மை நெருங்குது மாதர்களே! மேட்டு நரிகட்கும் மேய்ந்திடும் கூகைக்கும் மேனி நடுங்கிடப் போவதில்லை பூட்டிய வண்டி யவிழ்ப்பதில்லை உயிர் போகுமட்டும் விடப் போவதில்லை என்று பெண்டிர் எழுச்சிக்குக் கட்டியம் கூறுகிறார். பாவேந்தர் படைப்புக்களில் ஒரு சிறப்பான உண்மை நமக்குப் புலனாகும். அவர் ஆத்திகராக இருந்த நேரத்திலும், நாத்திகராக இருந்த நேரத்திலும், தேசியவாதியாக இருந்த போதும், திராவிட இயக்கவாதியாக இருந்தபோதும் தாம் ஏற்றுக்கொண்ட கொள்கையில் முழு ஈடுபாட்டுடன் விளங்கினார். தம்மை அக்கொள்கைக்கு முழுமையாக ஒப்படை செய்து தம் படைப்புக்களைச் செய்தார். அவர் இளமையில் நூற்றுக்கு நூறு காந்தியவாதி.