பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு கந்தரம் -இ பாரதிதாசனுக்கு நன்றிக் கடன் பாரதிதாசனுக்குப் பொதுவாகத் தமிழ் மக்களும், சிறப்பாகத் திராவிட இயக்கத்தவரும் நன்றிக்கடன் பட்டவர்கள். பாரதிதாசன் திராவிட இயக்கத்தின் காப்பிய வடிவம்; போர் முரசு. பிரெஞ்சுப் புரட்சிக்கு விக்தர் யூகோவும், ருசியப் புரட்சிக்கு மாயகோவ்ஸ்கியும் எப்படி ஈட்டி முனையாக விளங்கினார்களோ அதுபோல் பாரதிதாசன் திராவிட இயக்கப் புரட்சிக்கு ஈட்டி முனையாக விளங்கினார். இந்தி எதிர்ப்புப் போரில், எப்பக்கம் வந்து புகுந்துவிடும்! இந்தி எத்தனை பட்டாளம் கூட்டி வரும்? அற்பமென்போம் அந்த இந்தியினை - அதன் ஆதிக்கந் தன்னை எதிர்த்திடுவோம்! என்று எக்காளமிட்டபடி இயக்க இளைஞர்கள் அணிவகுத்துச் சென்றனர். பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது! .சிறுத்தையே வெளியில்வா! எவியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல்செயப் புறப்படு வெளியில்! நம்பினை பகலினை நள்ளிருள் என்றே சிம்புட் பறவையே சிறகை விரி, எழு! சிங்க இளைஞனே திருப்புமுகம்! திற, விழி! என்று திராவிட இயக்கப் பேச்சாளர்கள் இவருடைய பாடலைப் பாடித்தான், இளைஞர் பட்டாளத்தைத் தம்பால் ஈர்த்தனர். திராவிட இயக்கக் கொள்கைகளான சாதி ஒழிப்பு மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு, கைம்மை மணம்,