பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ கூறியிருக்கிறார். காதலர் நோக்கின் குறிக்கோளைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டியுரைக்கும் குறிப்புரை என்பார். 'அறிவுடம்படுதல்’ என்பது, இங்குத் தலைவனும், தலைவியும் தங்கள் ஒருமித்த காதலை ஐயமின்றிப் பார்வையால் புரிந்து கொள்ளுதல் என்பதாகும். காதலின் தொடக்கத்தில் ஒரு தலைவி பரிமாறும் நோக்கைக் கண்களவு கொள்ளும் சிறு நோக்கம் என்றும், 'செற்றார் போல் நோக்கு’ என்றும், ஏதிலார் போலப் பொதுநோக்கு’ என்றும் வள்ளுவர் குறிப்பிடுகின்றார். இருவருக்கும் காதல் உடன்பாடு ஏற்பட்ட பின்பும் தலைவன் நோக்கும்போது அவனைப் பார்த்து மெதுவாகப் புன்னகைப்பதுதான் தலைவியின் இயல்பு (குறள் 1094) காதலில் ஈடுபடும் தலைவியின் பன்முக நோக்கைச் சுவையாகக் குறிப்பிடும் வள்ளுவர், அவளுக்கு ஒரு கட்டுப்பாட்டை மட்டும் விதிக்கிறார் என்ன அக்கட்டுப்பாடு? குறிக்கொண்டு நோக்காமை! அதாவது உற்றுப் பார்க்காமை! ஒர் ஆடவன் முதன் முதலாக ஒரு பெண்ணைப் பார்க்கும் போது, அதை எதிர்கொள்ளும் பெண், ஏதிலார் போலப் பொது நோக்கு நோக்குவாள்; அல்லது சட்டெனப் பார்வையை விலக்கிக் கொள்வாள். இதுதான் இயல்பாக நடக்கும். அப்படியின்றி ஆடவன் பார்வையை எதிர்கொண்டு, அவளும் உற்றுப் பார்த்தால் அப்பெண்ணைப் பற்றி ஆடவன் தவறாக எண்ணக் கூடுமன்றோ?