பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாவேந்தர் படைப்பில் அங்கதம் ஆடவரை உற்றுப் பார்க்காத பெண்டிரின் உயர் பண்பை வள்ளுவர் குறிக்கொண்டு நோக்காமை' என்ற தொடரால் குறிப்பிடுகின்றார். அதற்குப் பொருள் கூறவந்த உரையாசிரியர் காலிங்கர், நம்மோடு பயின்றிலாமையின் குறிக்கொண்டு எதிர்முகம் நோக்காமை என்பார். உருது மகாகவி மிர்சா காலிப் தமது கஜல் கண்ணி ஒன்றில், காதலியின் கடைக்கண் பார்வையின் சிறப்பை விதந்து கூறும்போது, உன் கடைக்கண் பார்வை கொடுக்கும் பேரின்பத்தை என்னால் எப்படி விளக்க முடியும்? நாணயின்றி என்னை நீ உற்றுப் பார்த்திருந்தால் நம் காதலின் மீது எனக்கு - நம்பிக்கையே இல்லாமல் போயிருக்கும் என்று பாடுகிறார். பொதுவாகக் காதலுக்குக் கடைக்கண் பார்வையே திறவுகோல் என்பது புலனாகிறது: கம்பராமாயண ஆராய்ச்சியாளர்கள் ஒருமுகமாக ஒரு கருத்தை வற்புறுத்துவதுண்டு. “வால்மீகி இராமாயணம் ஆரியப் பண்பாட்டின் அடிப்படையில் வடமொழியில் எழுதப்பட்ட காப்பியம். கம்பன் தமிழ்ப் பண்பாட்டுக்கு ஏற்பப் பல இடங்களில் மாற்றம் செய்து தனது இராமாயணத்தை எழுதியிருக்கிறான். தமிழ்ப் பண்பாட்டின்படி களவியலுக்குப் பின்தான் கற்பியல் வாழ்க்கை அமைய வேண்டும். எனவேதான்