பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம்-) இந்நூலைப் பற்றி... துரண்டும்போதுதான் விளக்கு சுடர்விட்டு எரிகிறது. இலக்கிய நண்பர்கள் தூண்டும் போதுதான் எழுத்தாளன் சிந்தனையில் விழிப்பும், சுறுசுறுப்பும் ஏற்படுகின்றன. எனக்குத் தூண்டு கோள்கள் வானொலி நிலையங்களும், பாவேந்தர் பேரவைகளும், பல்கலைக் கழகக் கருத்தரங்குகளும் என்று சொன்னால் தவறில்லை. மதுரை காமராசர் பல்கலைக்கழகமும், ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றமும் பாவேந்தரைப் பற்றியும், தற்காலக் கவிதையைப் பற்றியும் நுட்பமாகச் சிந்திக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கின. பல்வேறு பட்ட செறிவான சிந்தனைகளும், கிளர்ச்சியூட்டும் நாடகக் காட்சிகளும், ஆழமான உணர்வுகள் குமுழியிட்டுப் பொங்கி வழியும் ஊற்றுப் பேரழகும் கொண்டவை ஆங்கிலக் கவிஞன் இராபர்ட் பிரெளனிங்கின் கவிதைகள். அவனும் கவிஞர் எலிசபெத் பேரட்டும் நடத்திய காதல் வாழ்க்கை, ஆங்கில இலக்கிய வரலாற்றின் பொன்னேடுகள். பிரெளனிங்கின் கவிதைக்குள் அவ்வளவு எளிதாக யாரும் நுழைந்து விட முடியாது. திக்குத் தெரியாத காட்டில்