பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பாவேந்தர் படைப்பில் அங்கதம்-இ] பண்புகளைக் கிளப்பிப் படிப்பவர் உள்ளத்தில் பல்வேறு உணர்ச்சி வேறுபாடுகளைத் தோற்றுவிக்க முயன்றான். தான் வெளிப்படுத்தும் ஒவ்வோர் உணர்ச்சிக்கும் ஒரு புதிய கவிதை மொழியை உருவாக்க முடியும் என்று கனவு கண்டான்; அதற்கான முயற்சியும் மேற் கொண்டான். ‘புரிதல்’ என்பது நிலையற்றது; அதுவோர் தோற்றமே. புரியாமைதான் நிலையானது. புரியாமை, இருண்மை என்ற பண்புகள்தாம் ஆதிநாள் தொட்டு ஆர்வத்தைத் தூண்டிக் கிளர்ச்சியூட்டி இயற்கையின் மேல் அழியாக் கவர்ச்சி ஏற்பட ஆதாரமாக இருந்து வந்திருக்கின்றன. கவிதைக்குரிய சிறப்பே இருண்மைதான் என்பது மேலை நாட்டில் கவிஞர் சிலரின் கொள்கை அறிவுச் செறிவு எஸ்ரா பவுண்டின் கவிதைப் பூட்டைத் திறக்கத் திறவுகோலின் (Keybook) துணையின்றி முடியாது. அவர் கவிதைகளைப் புரிந்து கொள்ளப் பலமொழி யறிவும், பன்முகப்பட்ட இலக்கிய வரலாற்றுப் புலமையும், கிரேக்க இதிகாசத் தெளிவும் பெற்றிருக்க வேண்டும். சீன, ஜப்பானியக் கவிதைப் போக்கும், கன்பூசியத் தத்துவமும். ஃபாசிசமும் தெரிந்திருக்க வேண்டும். பேரகராதி, மற்றும் பன்மொழிச் சிற்றகராதிகளின் துணையும் வேண்டும். பவுண்டின் சமகால நண்பர்கள், அவர்களிடம் அவர் கொண்டிருந்த நட்பு, அந்தரங்கம் யாவும் தெரிந்திருக்க வேண்டும். இவ்வளவும் போதாது; இசையறிவும், சிற்ப ஒவியக் கலையறிவும் வேண்டும். காதலையும், வீரத்தையும், இயற்கையையும் பாடிக் கொண்டிருந்த எளிதான போக்கை மாற்றித் தீவிரமான ஒரு கவிதைப் போக்கை உருவாக்கக் கவிஞர் டி.எஸ். எலியட் நினைத்தார். கவிதை சிக்கனமும் சுருக்கமும், நுணுக்கீமும்,