பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ சிக்கலும் உடையதாக இருக்கவேண்டுமென்று கருதினார் ஒருசிலரே புரிந்துகொண்டாலும், கவிதை தரமாக இருக்க வேண்டும் என்பது அவர் கருத்து. எனவே கவிதையின் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் சில மாற்றங்கள் ஏற்படுத்தினார். தம் கருத்து வெளிப்பாட்டிற்கு ஆங்கிலம் போதவில்லையென்றால் வேறு மொழிகளையும் இடையிடையே கையாளுவார். தாம் எழுதியுள்ள பாழ்நிலத்தில் (waste land) மட்டும் ஆறு வேறு மொழிகளைக் கையாண்டிருக்கிறார். ஹோமர் முதல் தற்காலப் படைப்பாளர் நூல்களிலிருந்தும், இந்து பெளத்தம் முதலிய கீழைநாட்டு மதங்களிலிருந்தும் தொன்மங்களிலிருந்தும், விவிலியத்திலிருந்தும் விளம்பரமில்லாத கட்டுக் கதைகளிலிருந்தும், பலதுறைத் தத்துவங்களிலிருந்தும் மேற்கோள்களையும், மரபுத் தொடர்களையும் அள்ளித் தெளித்துக் கொண்டு போவார். படிப்பவர் அவற்றில் முட்டி மோதி மூச்சுத் திணறுவர். எலியட்டின் செறிவான இக்கவிதைப் பாணியை ஐ. ஏ. ரிச்சர்ட்ஸ் என்ற திறனாய்வாளர் கவிதைச் சுருக்கெழுத்து (Poetic shorthand) என்று குறிப்பிடுகிறார். கவிதையைப் படைப்பவனும், கவிதையைப் படிப்பவனும் கடுமையான மூளையுழைப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பது எலியட்டின் கருத்து. இவரது படைப்பில் உள்ள இருண்மையின் காரணமாக அருவக் கவிஞர் (Invisiblepoet) என்று இலக்கிய வாதிகளால் இவர் அழைக்கப்படுகிறார். டி. எஸ். எலியட், எஸ்ரா பவுண்ட் இருவரின் பாதிப்பு இந்நூற்றாண்டுப் பிற்பகுதித் தமிழ்க் கவிதையில் அதிகம். இப்புதுக்கவிதைப் புலிகளைப் பார்த்துத் தம் உடம்பில் குடு