பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இ)- முருகு சந்தரம் -இ சுவாசம் காற்றலை. இசை ஒலி அலை. ஒலியலையைக் குறிப்பிடக் காற்றலையை எப்படிப் பயன்படுத்தலாம்? சங்க இலக்கியத்தில் வேறு யாரும் கையாளாத ஓர் உவமையை ஒரு கவிஞன் கையாளுகிறான். தன் காதலியின் அழகுக்கு உவமை கூறப் புகுந்த அவன் 'தொண்டி யன்ன நின்னலம்’ என்று குறிப்பிடுகிறான். ஒரு பெண்ணின் அழகுக்கு மயிலை, பூங்கொடியை உவமையாகக் கேட்டுப் பழக்கப்பட்ட நமக்கு, ஓர் ஊரை உவமை க்கூறியது புதிராகத் தோன்றலாம். பாரதிதாசன் தம் குடும்பவிளக்கில், தலைவியின் இசையைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'தெளிதமிழ்ப் பவனி வந்தாள்; செவிக்கெலாம் காட்சி தந்தாள்’ என்று பாடுகிறாரே! எப்படி? செவிக்குக் காட்சி ஏது? வடநாட்டின் இசைக்குயில் லதா மங்கேஸ்கருக்கு 'இல்லஸ்ட்ரேடெட் வீக்லி' என்ற ஆங்கில ஏடு ஒருமலர் வெளியிட்டது. அம்மலரின் முகப்பில் அவள் படத்தைப் Gusti' (), -915&#1 -91% u%b Moonlight in her throat arošip நயமான வரி அச்சிடப்பட்டிருந்தது. ஒரு பாடகியின் குரலுக்கு நிலவொளியை உருவகப்படுத்தலாமா? இவை யாவும் புதுைைமயின் காரணமாக இலக்கியக் கலைஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பரந்த இலக்கிய அனுபவம் இல்லாதார் இவற்றைப் புரிந்து கொள்ள முடியாது. - குறியீட்டியம் ஒப்புறவாலும் ஒட்டுறவாலும் மற்றொன்றைக் குறிப்பாக உணர்த்தும் பொருள் குறியீடு எனப்படுகிறது.