பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு கந்தரம் -இ நீ கேட்பவன் வறண்டவர்கள் கொடுப்பதாகப் பாவனை செய்கையிலும் நீ வாங்குவதாகப் பாவனை செய்பவன். வாத்ஸ்யாயனர் முதல் ஹாவ்லக் எல்லிஸ்வரை வியந்த விழிகளில் உன்னை எழுதிக் கொண்டு வேடிக்கை பார்க்கும் தெருப் பிள்ளைகள் எவ்வளவோ! காலத்தின் முதுகுகளில் பளுமிகுந்த இரவுகளில் குரல் சாட்டையை வீசிக் கெண்டே வரும் யதார்த்த வாதிகள் பரிவோடு சொல்கிறார்கள். "உனக்குத் தர்ம மிடாவிடில் உலகம் தழைப்பதேது?" சிலர் மட்டுமே தங்களுக்காகச் சமைத்ததில் உனக்குப் பங்கு தருகிறார்கள் பலர் - உனக்காகவே சமைக்கிறார்கள் தங்கள் ஆன்மாக்களின் பசியை அலட்சியம் செய்துவிட்டு உனக்குப் படைக்கிறார்கள். ஜீவ ஒளிமிக்க கனவுகள் பாய்ச்சி அருமையாக வளர்த்த தங்கள் தோட்டத்துத் தெய்வீகப் பூக்களை விரசக் கணுக்கள் முண்டும் உன் மார்பில் சூட்டத் தான் எவ்வளவு பேர்? -