பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பாவேந்தர் படைப்பில் அங்கதம்-இ) ஆனால்... ஆனால்... எனக்கோ? ராப்பிச்சைக் காரனே, உன்மேல் ஏற்பட்ட அலுப்பு! ஆம். உன்னைச் சகிக்க முடியவில்லை இனிமேல், என் வாசலின் கோலங்களை உன் சுவடுகளால் கிழிக்காதே போபோ போய்விடு போய்விடு - மெளனத்தின் நாவுகள் மீமெய்ம்மைமியம் (Surrealism) இந்த நூற்றாண்டின் ஐரோப்பியக் கவிதைப் புரட்சியில் மீமெய்ம்மையியக்கத்துக்கு அதிகப் பங்குண்டு. டாக்டர் ஃபிராய்டின் ஆழ்மனக் கொள்கை (Psychoanalysis) இவ்வியக்கத்துக்கு வித்து என்று சொல்லலாம். இக்கொள்கை கவிதையை மட்டுமல்லாமல், ஓவியக்கலையையும் வெகுவாகப் பாதித்தது. இக்கொள்கை காரண காரியங்களுக்கும் தர்க்கத்துக்கும் கட்டுப்படாதது. இது பழமையைத் தகர்க்கக் கூடியது; தலைகீழானது. இருண்மையே மீமெய்ம்மைக் கவிதையின் சிறப்புப் பண்பு. இந்த உத்தியைப் பயன்படுத்திச் கவிஞர் சிலர் தமிழில் கவிதை எழுதி வருகின்றனர். இவ்வுத்தியைப் பயன்படுத்தித் தமிழில் முதன் முதலாகக் காப்பியம் வடித்தது நான்தான். அகலிகையின் பிற்கால வாழ்க்கைக்கு இளமையில் அவளைப் பாதித்த ஆழ்மனக் கோளாறுகளே காரணம் என்ற கருத்தை மையமாக வைத்து வெள்ளை யானை என்ற பெயரில் அக்காப்பியத்தைச் செய்துள்ளேன். அதைப் பற்றிப் புதுக் கவிதைத் திறனாய்வாளரான முனைவர் பாலா குறிப்பிடும்போது, . .