உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. பாரதிதாசனுக்குப் பா மடல்! (மூன்று ஆண்டுகளுக்கு முன்(1964) பாவேந்தர் நம்மை-அவர் பாவுணர்வால் கட்டியாண்ட இத் தமிழகத்தை-விட்டுப்பிரிந்து சென்ருர்.அவர்சென்ற பின் உள்ள தமிழகத்தைப் பற்றி யறிவித்து, எதிர் காலத் தமிழகத்தைப் பற்றி உறுதிகூறி எழுதியது இப் பாட்டு மடல் அவர் எங்கிருந்தாலும் இம் மடல் அவருக்குப் போய்ச் சேரட்டும். இல்லை; அவர் காற்ருேடு, கதிரோடு, விண்ளுெடு, உடுக்களொடு, ஊற்ருெடு, மலர்களோடு-இன்னும் இயற்கையில் உள்ள பல்கோடிக் கணக்கான அணுக்களொடு போய்க் கலந்திருப்பினும் அல்லது இ வ் வு ல கத் தமிழர்தம் உள்ளங்களில் ஊடாடிக் கொண்டிருக் கும் உணர்வொடு உணர்வாகக் கலந்திருப்பினும் அங்கெல்லாம் இப் பாடலின் உணர்வலைகள் பட்டுத் தெறிக்கட்டும் ஓலமிடட்டும் !) - அன்புள்ள பாவேந்தே ! வணக்கம். இங்கே அனைவருமே நலமெனினும், ஐயா, நீங்கள் தென்புதுவைத் திருமண்ணே-தமிழ கத்தை தீந்தமிழர் தமைப்பிரிந்த நாளி னின்று தென்பில்லை உளத்தினிலே ஊக்க மில்லை; - திருவளர்ந்த தமிழகத்தில் செழிப்பு மில்லை; அன்பில்லை தமிழர்க்குள்; ஆர்வ மில்லை; அனைத்துல்க வாழ்க்கையிலும் அமைதி இல்லை. முன்பிருந்த நிலையறிவீர்; தமிழர் அன்றே - மூளிகளாய் நின்றதுவும் தெரிந்தி ருப்பீர்; என்பிருந்த தோல்உருவாய்ச் சதை, நார் இன்றி *. எள்ளளவும் மானமின்றிச் சுரணை இன்றித் தன் பிறந்த நாடு, மொழி, மக்கள் என்ற - . தன்னுணர்வு சிறிதுமின்றித் தமிழர் வாழும் துன்பிருந்த சூழ்நிலையை அறிந்தி ருப்பீர் துளியேதும் மாற்றமில்லை; நிலைஅவ் வாறே!