உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 122 — ‘தென்றல் அடிக்கையில் பச்சிளங் கீற்றுச் சிலிர்த்து நிலைகுலைந் தாடுதல் போல் இன்றைக்கு நீ கொண்ட பூரிப்பின் காரணம் என்னடி மின்னல் இடைச் சிறுக்கி? நின்றஉன் கால்கள் நிலைக்கவில்லை; கடல் நீராய் நெளிந்தது பொன்னுடலும்! அன்றைக்குச் சென்றவன் என் மகன் வீட்டை அடைந்த மகிழ்ச்சித் திருக்கூத்தோ?” “மாற்றியணிவதும் சேலையினை, மலர் வாங்கி யணிவதும் கூந்தலிலே, ஒரு காற்றென ஓடிச் சிரிக்கும் முகத்துக்குக் கண்ணுடி காட்டிப்பின் மீளுவதும்’ நேற்றில்லையே! இன்று பூரிப்ப தென்னடி நீள்புருவத்து நிலாப் பிறைச்சி? வேற்றுார்க்குச் சென்றவன் என்மகன் வீட்டுக்கு மீண்ட மகிழ்ச்சித் திருக்கூத்தோ? வெளிப்படை யாகப் பொருள்தரும் சொற்கள்! விளக்கிடப் பிறரோ உரைகளோ வேண்டா. துளி,பிச காத உணர்வின் தொடையல்! தோகைக் குறும்பினை இன்னும் கேளுங்கள்: கறிகள் சமைத்தபின் தெருவினில் விற்றிடும் காய்களே ஒடி அழைப்பதுவும் . - சிறுவிரல் மோதிரம் பார்ப்பதுவும், பார்த்து மகிழ்வதும், செவ்விதழ் சேர்ப்பதுவும் அறையினை நோக்கலும் நேற்றிலையே.நீ அப்படிப் பூரிப்ப தேதுக்கடி? பிறநகர் சென்றவன்-என்மகன்-ஊர்வரப் பெற்ற மகிழ்ச்சித் திருக்கூத்தோ? கச்சையை நோக்கலும், கண்கள் மலர்வதும் கைவளை யைச்சரி செய்வதுவும், மொச்சை உரிக்கையில் முன்கட்டில் ஓடி, மு. ழங்கும்.சிலம்படி மீளுவதும், - -